என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தங்கமீன்கள் சாதனா
நீங்கள் தேடியது "தங்கமீன்கள் சாதனா"
ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali
ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேரன்பு’ .
மம்முட்டி நாயகனாக அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், திருநங்கை அஞ்சலி அமீர், அருள்தாஸ், சுராஜ் வெஞ்சரமூட், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு - சூர்யா பிரதாமன், கலை இயக்குநர் - குமார் கங்கப்பன், பாடல்கள் - வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், தயாரிப்பாளர் - பி.எல்.தேனப்பன், இணை தயாரிப்பு - டி.சரஸ்வதி, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - ராம்.
‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,
“இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.” என்றார்.
பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Peranbu #Ram #Mammootty #Anjali
பேரன்பு டிரைலர்:
ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் புதிரானதாக இருக்கும் என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். #Peranbu #Mammootty
‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.
‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,
“இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.”
சமீபத்தில் வெளியாகிய படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Peranbu #Mammootty #Anjali
ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Peranbu #Mammootty
‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் கிடைத்துள்ள நிலையில், யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை வருகிற செப்டம்பர் 7-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். சரத்குமார், அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ ராஜலெக்ஷ்மி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #Peranbu #Mammootty #Anjali
ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ராம் மீதோ, அஞ்சலி மீதோ தனக்கு கோபம் இல்லை என்று கூறினார். #Peranbu
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என்று மூன்று தரமான படங்களை ராம் இயக்கி இருக்கிறார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் ‘பேரன்பு’ படம் உருவாகி இருக்கிறது. மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரகனி, தங்க மீன்கள் சாதனா, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு நடந்தது.
இதில் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் மம்முட்டி, சத்யராஜ், சித்தார்த், வசந்த் ரவி, இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, மிஷ்கின், வெற்றிமாறன், அமீர், கே.எஸ்.ரவிகுமார், விஜய், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மனோபாலா, கோபி நயினார், சசி, மீரா கதிரவன், ஈ.ராம்தாஸ், நடிகைகள் அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சத்யராஜ் பேசும்போது ‘நான் முதலில் வில்லனாக நடித்துவிட்டு தான் கதாநாயகனாக மாறினேன். அப்போது எனக்கு உதவி செய்தது மம்முட்டி நடித்த படங்கள் தான். அவரை பார்த்து தான் நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். மம்முட்டி படங்களை ரீமேக் செய்துதான் நான் கதாநாயகன் ஆனேன் என்றார்.
ஆன்ட்ரியா பேசும்போது ‘இந்த படத்தில் என்னை நடிக்க அழைக்கவில்லை என்று ராம் மீது கோபம் இல்லை. அஞ்சலி அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்’ என்றார். #Peranbu #Mammootty #Anjali #Andrea
ஆண்ட்ரியா பேசிய வீடியோவை பார்க்க:
ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu
ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது.
இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு வந்த போது ரசிகர்கள் யுவனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு யுவன் அளித்த பதில்களாவது,
கே:- சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்தும் யுவனுக்கான அங்கீகாரம், பெரிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது?
ப:- அதைப்பற்றி வருத்தப்பட தேவையில்லை என்று ரசிகர்களை கைகாட்டி இதைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமே இல்லை என்றார். இதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. அந்த எண்ணமும் கிடையாது. மக்கள் மனதில் பதிந்தால் போதும்.
கே:- நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்கள் இணையும் முதல் படம் இது, எப்படி உணர்கிறீர்கள்?
ப:- இந்த படத்திற்காக இசையமைக்கும் போதே எங்கே அவர் என்று எங்களை யோசிக்க வைத்தார். சில பாடல்கள் எழுதும் போது இதற்கு முத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். அவர் எங்கேயும் போகவில்லை, அவருடைய வரிகள் இங்கேதான் இருக்கிறது. ராம் பேசும் போது, முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த இடம் அப்படியே இருக்கும்.
இந்த படத்தை மம்முட்டி ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களது இடத்தில் இருந்து இந்த மாதிரியான ஒரு படத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் மகிழ்ச்சி. இதுவரை பண்ணாத முயற்சியை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு யுவன் பேசினார். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali
ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு என்றார். #Peranbu
ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது.
இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேசும் போது,
ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கும்போது, இயக்குநருடைய குணாதிசயம் வெளியே வரும். எல்லா இயக்குநர்களும் தங்குளுடைய கதைகளை முடிவு செய்த பிறகு தலைப்பை யோசிப்பார்கள். பொதுவாக எல்லா இயக்குநர்களின் படங்களிலும் அவர்களுடைய குணாதிசயம் அல்லது அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது அந்த படத்தின் தலைப்பில் இருந்து வரும். உதாரணமாக மிஷ்கின் பிசாசு என்று வைத்திருக்கிறார் அல்லவா, அதுபோல தான். அதை அவரே ஒத்துக் கொள்வார்.
பேரன்பு என்ற தலைப்பை வைக்கும் போதே ஒரு மனிதனுக்குள் இவ்வுளவு பெரிய ஒரு சிந்தனை எப்படி இருக்கமுடியும். நாம் எல்லோருமே கடந்து போயிருப்போம். நாம் அனைவரும் மாற்றுத்திறனாளி ஒருவரை பார்ப்போம். பார்த்துவிட்டு கடந்து போய்விடுவோம். அந்த மாற்றுத்திறனாளியின் பார்வையில் உலகத்தை பார்க்கும் பார்வை, அந்த பெண்ணின் பெற்றோர் இந்த சமூகத்தில் எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பார்வை தான் ராமின் பேரன்பு.
இந்த படத்தை பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அவ்வுளவு பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இவையெல்லாமே ஒரு அனுபவம் தான். அடுத்தவர்களுக்கு இந்த படம் ஒரு ரெபரன்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. இந்திய சினிமாவில் அதுபோன்ற ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு. எல்லாவற்றிலும் இந்த படம் முன்மாதிரியாக இருக்கும். நாம் பல இடங்களை புகைப்படத்தில் பார்த்திருப்போம். அதை ஒருநாள் நேரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு தான் பேரன்பு படம். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X